கந்தர் ஷஷ்டி கவசம்
(Kandar Shashti Kavacham)
(தேவராய ஸ்வாமிகள் அருளியது)
(thEvaraaya suvaamigaL aruLiyadhu)
கந்தர் சஷ்டி கவசத்தை ஸ்ரீ தேவராய ஸ்வாமிகள் இயற்றி உள்ளார்கள். இது முருகனின் அருளைப் பெறுவதற்காக இயற்றப்பட்டது. நமது வாழ்க்கையில் முன்னேற இது நமக்கு கிடைத்துள்ள ஒரு பொக்கிஷம் ஆகும்.
முருகனின் அருளை வேண்டுவதற்காக அவர் கந்தர் சஹ்டி கவசத்தை பாடுகிறார். இந்த கவசத்தை நாமும் தினமும் படிப்பதினால், வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து துன்பங்களும் விலகும். மழலை செல்வம் இல்லாதவர்கள் மழலை செல்வம் பெறுவார்கள். வாழ்வில் வளமும், வசந்தமும் பெருகும். இதைப் படிப்பதின் மூலம் உலகின் அனைத்து இன்பங்களையும் பெறுவார்கள். ஒரு போர்வீரன் யுத்தத்திற்குச் செல்லும் முன்னதாக அணியும் கேடயம் போல, நம்முடைய வாழ்க்கையில் கந்தர் சாஸ்தி கவசம் ஒரு கேடயமாக நின்றிருந்தபடி நம்மைக் காக்கும்.
Kanda Sasti Kavacam composed by Śrī Deva Raya Swamigal helps one to obtain the grace of Lord Murugan. This is a rare and valuable treasure that helps one to be successful in day-to-day life.
In Kanda Sasti Kavacam the author prays to Lord Muruga to shower His grace. It is certain that by regular chanting of this kavacam all the predicaments of life are resolved. People without children will enjoy fertility. Prosperity and plenty will abound. Peace will prevail at home. The devotee will enjoy every good fortune under the sun. As a warrior going to battle puts on armour to protect himself, so Kanda Sasti Kavacam helps one to be safe in day-to-day life.
காப்பு | Kaappu |
துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் | thudhippOrkku valvinaibOm, thunbambOm nensil |
நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்தோங்கும் | padhippOrkku selvam paliththuk – kadhith(thu)Ongum |
நிஷ்ட்டையும் கைகூடும் | nishdaiyum kaigoodum, nimalar aruL |
நிமலர் அருள் கந்தர் சஷ்டிக் கவசம்தனை | kandhar sashti kavasam thanai. |
குறள் வெண்பா | Kural venbaa |
அமரர்இடர் தீர அமரம் புரிந்த | amarar idardheera amaram purindha |
குமரனடி நெஞ்சே குறி | kumaran adi nensE kuRi. |
நூல் | |
சஷ்ட்டியை நோக்க சரவணபவனார் | sashtiyai nOkka saravaNa bavanaar |
சிஷ்ட்டருக் குதவும்செங்கதிர் வேலோன் | sishdaruk kudhavum sengadhir vElOn |
பாதமிரண்டில் பன்மணிச் சதங்கை | paadham irandil panmaNi sadhangai |
கீதம் பாட கிண்கிணி யாட | keedham paadak kiNgiNi yaada |
மையல் நடஞ்செய்யும் மயில்வாகனனார் (5) | maiya nadanseyum mayilvaa kananaar |
கையில் வேலால் எனைக் காக்கவென்று வந்து | kaiyilvE laalenaik kaakkaven Ruvandhu |
வர வர வேலா யுதனார் வருக | varavara vElaa yudhanaar varuga |
வருக வருக மயிலோன் வருக | varuga varuga mayilOn varuga |
இந்திர முதலா எண்திசை போற்ற | indhiran mudhalaa endisai pOTRa |
மந்திர வடிவேல் வருக வருக (10) | mandhira vadivEl varuga varuga |
வாசவன் மருகா வருக வருக | vaasavan marugaa varuga varuga |
நேசக் குறமகள் நினைவோன் வருக | nEsak kuRamagaL ninaivOn varuga |
ஆறுமுகம் படைத்த ஐயா வருக | aaRumugam padaiththa aiyaa varuga |
நீறிடும் வேலவன் நித்தம் வருக | neeRidum vElavan niththam varuga |
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக (15) | siragiri vElavan seekkiram varuga |
சரஹுணபவனார் சடுதியில் வருக | saravaNa bavanaar sadudhiyil varuga |
ரஹுண பவச ரரரர ரரர | ravaNa bavasa rararara rarara |
ரிஹுண பவச ரிரிரிரி ரிரிரி | rivaNa bavasa riririri ririri |
விணபவ சரஹுண வீரா நமோ நம | viNabava saravaNa veeraa namOnNama |
நிபவ சரஹுண நிறநிற நிறென (20) | nibava saravaNa niRanNiRa niRena |
வசர ஹுணப வருக வருக | vasara vaNaba varuga varuga |
அசுரர் குடிகெடுத்த ஐயா வருக | asurar kudigeduththa aiyaa varuga |
என்னை ஆளும் இளையோன் கையில் | ennai aaLum iLaiyOn kaiyil |
பன்னிரண்டா யுதம் பாச அங்குசமும் | panniraN taayudham paasaaNG kusamum |
பரந்த விழிகள் பன்னிரண்டிலங்க (25) | parandha vizhigaL panniraN tilanga |
விரைந்தெனைக்காக்க வேலோன்வருக | viraindhenaik kaakka vElOn varuga |
ஐயும் கிலியும் அடைவுடன்சௌவும் | aiyum kiliyum adaivudan sauvum |
உ ய்யொளி சௌவும் உ யிர் ஐயும் கிலியும் | uyyoLi sauvum uyiraiyum kiliyum |
கிலியும் சௌவும் கிளரொளி ஐயும் | kiliyuNY sauvum kiLaroLi yaiyum |
நிலை பெற் றென்முன் நித்தமும் ஒளிரும் (30) | nilaibeR Renmun niththamum oLirum |
சண்முகம் நீயும் தணியொளி யொவ்வும் | saNmugan theeyum thaniyoLi yovvum |
குண்டலி யாம் சிவ குகன்தினம் வருக | kundali yaamsiva kugan_dhinam varuga |
ஆறுமுகமும் அணிமுடி ஆறும் | aaRu mugamum aNimudi aRum |
நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும் | neeRidu neTRiyum neenda puruvam |
பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும் (35) | panniru kaNNum pavaLach sevvaayum |
நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும் | nanneRi neTRiyil navamaNich suttiyum |
ஈராறு செவியில் இலகு குண்டலமும் | eeraaRu seviyil ilaguguN talamum |
ஆறிரு திண்புயத் தழகிய மார்பில் | aaRiru thiNbuyath thazhagiya maarbil |
பல் பூஷணமும் பதக்கமும் தரித்து | palboo shaNamum padhakkamum thariththu |
நன்மணி பூண்ட நவரத்ன மாலையும் (40) | nanmaNi poonda navarathna maalaiyum |
முப்புரி நூலும் முத்தணி மார்பும் | muppuri noolum muththaNi maarbum |
செப்பழகுடைய திருவயிறு உ ந்தியும் | seppazha kudaiya thiruvayiRu undhiyum |
துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும் | thuvanda marungil sudaroLip pattum |
நவரத்தினம் பதித்த நற்சீராவும் | navarathnam padhiththa naRchee raavum |
இருதொடை அழகும் இணைமுழந்தாளும் (45) | irudhodai azhagum iNaimuzhanN thaaLum |
திருவடி யதனில் சிலம்பொலி முழங்க | thiruvadi yadhanil silamboli muzhanga |
செககண செககண செககண செகண | segagaNa segagaNa segagaNa segaNa |
மொகமொக மொகமொக மொகமொக மொகென | mogamoga mogamoga mogamoga mogena |
நகநக நகநக நகநக நகென | naganNaga naganNaga naganNaga nagena |
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண (50) | tiguguNa tigudigu tiguguNa tiguNa |
ரரரர ரரரர ரரரர ரரர | rararara rararara rararara rarara |
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி | riririri riririri riririri ririri |
டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு | dudududu dudududu dudududu dududu |
டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு | dagudagu digudigu dangu dingugu |
விந்து விந்து மயிலோன் விந்து (55) | vindhu vindhu mayilOn vindhu |
முந்து முந்து முருகவேள் முந்து | mundhu mundhu murugavEL mundhu |
என்றனை யாளும் ஏரகச் செல்வ | enRanai yaaLum Eragach selva |
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்து தவும் | maindhan vEndum varamagizhnN thudhavum |
லாலா லாலா லாலா வேசமும் | laalaa laalaa laalaa vEsamum |
லீலா லீலா லீலா வினோதனென்று (60) | leelaa leelaa leelaa vinOdhanenRu |
உ ன்திரு வடியை உ ருதி யென்றெண்ணும் | un_dhiru vadiyai uRudhiyen ReNNum |
என்தலை வைத்துன் இணையடி காக்க | en_dhalai vaiththun iNaiyadi kaakka |
என் உ யிர்க் குயிராம் இறைவன் காக்க | ennuyirk kuyiraam iRaivan kaakka |
பன்னிரு விழியால் பாலனைக் காக்க | panniru vizhiyaal paalanaik kaakka |
அடியேன் வதனம் அழகுவேல் காக்க (65) | adiyEn vadhanam azhaguvEl kaakka |
பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க | podibunai neTRiyaip punidhavEl kaakka |
கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க | kadhirvEl irandum kaNNinaik kaakka |
விதிசெவி யிரண்டும் வேலவர் காக்க | vidhisevi irandum vElavar kaakka |
நாசிகளிரண்டும் நல்வேல்காக்க | naasiga Lirandum nalvEl kaakka |
பேசிய வாய்தனைப் பெருவேல்காக்க (70) | pEsiya vaaydhanaip peruvEl kaakka |
முப்பத் திருபல் முனைவேல் காக்க | muppath thirubal munaivEl kaakka |
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க | seppiya naavaich sevvEl kaakka |
கன்னமிரண்டும் கதிர்வேல் காக்க | kannam irandu kadhirvEl kaakka |
என்னிளங் கழுத்தை இனியவேல்காக்க | enniLaNG kazhuththai iniyavEl kaakka |
மார்பை இரத்ன வடிவேல் காக்க (75) | maarbai iraththina vadivEl kaakka |
சேரிள முலைமார் திருவேல் காக்க | sEriLa mulaimaar thiruvEl kaakka |
வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க | vadivE lirudhOL vaLambeRak kaakka |
பிடரிக ளிரண்டும் பெருவேல்காக்க | pidariga Lirandum peruvEl kaakka |
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க | azhagudan mudhugai aruLvEl kaakka |
பழுபதி னாறும் பருவேல் காக்க (80) | pazhubadhi NnaaRum paruvEl kaakka |
வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க | veTRivEl vayiTRai viLangavE kaakka |
சிற்றிடை அழகுறச் செவ்வேல் காக்க | siTridai azhaguRach sevvEl kaakka |
நாண் ஆம் கயிற்றை நல்வேல் காக்க | naaNaaNG kayiTRai nalvEl kaakka |
ஆண்பெண்குறிகளை அயில்வேல் காக்க | aaNguRi irandum ayilvEl kaakka |
பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க (85) | pitta miraN tum peruvEl kaakka |
வட்டக் குதத்தை வல்வேல் காக்க | vattak kudhakthai valvEl kaakka |
பணைத்தொடை யிரண்டும் பருவேல் காக்க | paNaiththodai irandum paruvEl kaakka |
கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க | kaNaikkaal muzhandhaaL kadhirvEl kaakka |
ஐவிரல் அடியிணை அருள்வேல் காக்க | aiviral adiyinai aruLvEl kaakka |
கைக ளிரண்டும் கருணைவேல் காக்க (90) | kaiga Lirandum karuNaivEl kaakka |
முன்கையிரண்டும் முரண்வேல் காக்க | mun_gai yirandum muraNvEl kaakka |
பின்கையிரண்டும் பின்னவள் இருக்க | pin_gai irandum pinnavaL irukka |
நாவில் சரஸ்வதி நற்றுணை ஆக | naavil saraSvadhi naTRuNai yaaga |
நாபிக் கமலம் நல்வேல் காக்க | naabik kamalam nalvEl kaakka |
முப்பால் நாடியை முனை வேல் காக்க (95) | muppaal naadiyai munaivEl kaakka |
எப்பொழுதும் எனை எதிர்வேல் காக்க | eppezhu thumenai edhirvEl kaakka |
அடியேன் வசனம் அசைவுள நேரம் | adiyEn vasanam asaivuLa nEram |
கடுகவே வந்து கனக வேல் காக்க | kadugavE vandhu kanagavEl kaakka |
வரும் பகல் தன்னில் வச்சிரவேல் காக்க | varumbagal thannil vachchiravEl kaakka |
அறையிருள் தன்னில் அனையவேல் காக்க (100) | araiyiruL thannil anaiyavEl kaakka |
ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க | EmaththiR saamaththil edhirvEl kaakka |
தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க | thaamadham neekkich sadhurvEl kaakka |
காக்க காக்க கனகவேல் காக்க | kaakka kaakka kanagavEl kaakka |
நோக்க நோக்க நொடியில்நோக்க | nOkka nOkka nodiyil nOkka |
தாக்கத் தாக்கத் தடையறத் தாக்க (105) | thaakka thaakka thadaiyaRath thaakka |
பார்க்கப் பார்க்கப் பாவம் பொடிபட | paarkka paarkka paavam podibada |
பில்லி சூனியம் பெரும்பகை அகல | pilli sooniyam perumbagai agala |
வல்ல பு>தம் வலாஷ்டிகப் பேய்கள் | valla poodham valaattigap pEygaL |
அல்லற் படுத்தும் அடங்கா முனியும் | allaR paduththum adangaa muniyum |
பிள்ளைகள்தின்னும் புழக்கடை முனியும் (110) | piLLaigaL thinnum puzhakkadai muniyum |
கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும் | koLLivaayp pEygaLum kuRaLaip pEygaLum |
பெண்களைத் தொடரும் பிரமராட்சதரும் | peNgaLaith thodarum piramaraa shasarum |
அடியனைக் கண்டால் அலறிக்கலங்கிட | adiyanaik kandaal alaRik kalangida |
இரிசிக் காட்டேரி இத்துன்ப சேனையும் | irisikkaat tEri iththunba sEnaiyum |
எல்லினும் இருட்டினும் எதிர்படும் அண்ணரும் (115) | ellilum iruttilum edhirppadum aNNarum |
கனபூசை கொள்ளும் காளியோடனே வரும் | kanaboosai koLLum kaaLiyO tanaivarum |
விட்டாங் காரரும் மிகுபல பேய்களும் | thandiyak kaararum sandaa LargaLum |
தண்டியக் காரரும் சண்டாளர்களும் | adiyanaik kandaal alaRik kalangida |
என்பெயர் சொல்லவும் இடிவிழுந்தோடிட | enbeyar sellavum idivizhunN thOdida |
ஆனை அடியினில் அரும்பாவைகளும் (120) | aanai adiyinil arumbaa vaigaLum |
புன்னை மயிரும் பிள்ளைகள் என்பும் | poonai mayirum piLLaigaL enbum |
நகமும் மயிரும் நீண்முடி மண்டையும் | nagamum mayirum neeLmudi mandaiyum |
பாவைகளுடனே பலகலசத்துடன் | paavaiga LudanE palagala saththudan |
மனையிற் புதைத்த வஞ்சனை தனையும் | manaiyiR pudhaiththa vansanai thanaiyum |
ஒட்டியச் செருக்கும் ஒட்டியப் பாவையும் (125) | Ottiya serkkum ottiyap paarvaiyum |
காசும் பணமும் காவுடன் சோறும் | kaasum paNamum kaavudan sORum |
ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும் | odhumaNY sanamum oruvazhip pOkkum |
அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட | adiyanaik kandaal alaindhu kulaindhida |
மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட | maaTRaar vansagar vandhu vaNangida |
கால தூதாளெனைக்கண்டாற் கலங்கிட (130) | kaaladhoo thaaLenaik kandaaR kalangida |
அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட | ansi nadungida arandu purandida |
வாய்விட்டலறி மதிகெட்டோட | vaayvit talaRi madhigettOdap |
படியினில் முட்ட பாசக்க யிற்றால் | padiyinil muttap paasak kayiRnaal |
கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு | kattudan angam kadhaRidak kattu |
கட்டி உ ருட்டு கால்கை முறிய (135) | katti uruttu kaalgai muRiyak |
கட்டு கட்டு கதறிடக் கட்டு | kattu kattu kadhaRidak kattu |
முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட | muttu muttu vizhigaL pidhungida |
செக்கு செக்கு செதில் செதிலாக | sekku sekku sedhilsedhi laaga |
சொக்கு சொக்குச் சூர்ப்பகைச் சொக்கு | sokku sokku soorbagai sokku |
குத்து குத்து கூர்வடி வேலால் (140) | kuththu kuththu koorvadi vElaal |
பற்று பற்று பகலவன் தணலெரி | paTRu paTRu pagalavan thaNaleRi |
தணலெரி தணலெரி தணலது வாக | thaNaleRi thaNaleRi thaNaladhu vaaga |
விடு விடு வேலை வெருண்டது வோட | viduvidu vElai verundadhu vOdap |
புலியும் நரியும் புன்னரி நாயும் | puliyum nariyum puNNari naayum |
எலியும் கரடியும் இனித்தொடர்ந் தோட (145) | eliyum karadiyum inidhodaa thOdath |
தேளும் பாம்பும் செய்யான் பு>ரான் | thELum paambum seyyaan pooraan |
கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம் | kaduvida vishangaL kadiththuya rangam |
ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க | ERiya vishangaL eLidhinil iRanga |
ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும் | oLippum suLukkum orudhalai nOvum |
வாதம் சயித்தியம் வலிப்புப் பித்தம் (150) | vaadhaNY sayiththiyam valippup piththam |
சூலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு | soolaisayaNG kunmam sokkuk sirangu |
குடைச்சல் சிலந்தி குடல்விப் பிருதி | kudaichchal silandhi kudalvip piridhi |
பக்கப் பிளவை படர் தொடை வாழை | pakkap piLavai padardhodai vaazhai |
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி | kaduvan paduvan kaiththaaL silandhi |
பற்குத்து அரணை பருஅரை யாப்பும் (155) | paRkuth thaRanai varuarai yaappum |
எல்லாப் பிணியும் எந்தனைக் கண்டால் | Ellap piniyum enthanaik kandaal |
நில்லா தோட நீ எனக் கருள்வாய் | nillaa thOda neeenak karuLvaay |
ஈரேழ் உ லகமும் எனக்கு உ றவாக | eerEzh ulagamum enakkuRa vaaga |
ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா | aaNum peNNum anaivarum enakkaa |
மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும் (160) | maNNaa Larasarum magizhdhuRa vaagavum |
உ ன்னைத் துதிக்க உ ன் திருநாமம் | unnaith thudhikka un_dhiru naamam |
சரஹுண பவணே சையொளி பவனெ | saravaNa pavanE sailoLi pavanE |
திரிபுர பவனெ திகழொளி பவனெ | thiribura pavanE thigazhoLi pavanE |
பரிபுர பவனெ பவம்ஒளி பவனெ | paribura pavanE pavamozhi pavanE |
அரிதிரு மருகா அமரா பதியைக் (165) | aridhiru marugaa amaraa padhiyaik |
காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய் | kaaththuth thEvargaL kadunsirai viduththaay |
கந்தா குகனே கதிர்வேலவனே | kandhaa kuganE kadhirvE lavanE |
கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனே | kaarththigai maindhaa kadambaa kadambanai |
இடும்பனை யழித்த இனியவேல் முருகா | idumbanai yazhiththa iniyavEl murugaa |
தணிகா சலனே சங்கரன் புதல்வா (170) | thaNigaa salanE sangaran pudhalvaa |
கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா | kadhirgaa maththurai kadhirvEl murugaa |
பழநிப் பதிவாழ் பால குமாரா | pazhanip padhivaazh paala kumaaraa |
ஆவினன் குடிவாழ் அழகிய வேலா | aavinan kudivaazh azhagiya vElaa |
செந்தின்மா மலையுறும் செங்கல்வராயா | sendhinmaa malaiyuRum sengalva raayaa |
சமரா புரிவாழ் சண்முகத் தரசே (175) | samaraa purivaazh saNmugath tharasE |
காரார் குழலாள் கலைமகள் நன்றாய் | kaaraar kuzhalaaL kalaimagaL nannaay |
என்நா இருக்க யான் உ னைப் பாட | ennNaa irukka yaanunaip paada |
எனைத்தொடர்ந் திருக்கும் எந்தை முருகனைப் | enaiththodarnN thirukkum endhai muruganaip |
பாடினேன் ஆடினேன் பரவசமாக | paadinEn aadinEn paravasa maaga |
ஆடினேன் நாடினேன் ஆவினன் பூதியை (180) | aadinEn naadinEn aavinan poodhiyai |
நேச முடன்யான் நெற்றியில் அணியப் | nEsa mudanyaan neTRiyil aNiyap |
பாச வினைகள் பற்றது நீங்கி | paasa vinaigaL paTRadhu neengi |
உ ன்பதம் பெறவே உ ன்னருளாக | unbadham peRavE unnaru Laaga |
அன்புடன் இரஷி அன்னமுஞ் சொன்னமும் | anbudan irashi annamum sonnamum |
மெத்த மெத் தாக வேலா யுதனார் (185) | meththameth thaaga vElaa yudhanaar |
சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்க | siththibeR RadiyEn siRappudan vaazhga |
வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க | vaazhga vaazhga mayilOn vaazhga |
வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க | vaazhga vaazhga vadivEl vaazhga |
வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க | vaazhga vaazhga malaikkuru vaazhga |
வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன் (190) | vaazhga vaazhga malaikkuRa magaLudan |
வாழ்க வாழ்க வாரணத்துவசம் | vaazhga vaazhga vaaraNath thuvasan |
வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்க | vaazhga vaazhgaen vaRumaigaL neenga |
எத்தனை குறைகள் எத்தனை பிழைகள் | eththanai kuRaigaL eththanai pizhaigaL |
எத்தனை யடியேன் எத்தனை செய்தால் | eththanai yadiyEn eththanai seyinum |
பெற்றவன் நீ குரு பொறுப்பது உ ன் கடன் (195) | peTRavan neeguru poRuppa thun_gadan |
பெற்றவள்குறமகள் பெற்றவளாமே | peTRavaL kuRamagaL peTRava LaamE |
பிள்ளையென் றன்பாய் பிரிய மளித்து | piLLaiyen Ranbaayp piriya maLiththu |
மைந்தனென் மீது உ ன் மனமகிழ்ந் தருளித் | maindhanen meedhun manamagizhnN tharuLith |
தஞ்சமென் றடியார் தழைத்திட அருள் செய் | thansamen Radiyaar thazhaiththida aruLsey |
கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய (200) | kandhar sashdi kavasam virumbiya |
பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக் | paalan thEva raayan pagarndhadhaik |
காலையில் மாலையில் கருத்துடன் நாளும் | kaalaiyil maalaiyil karuththudan naaLum |
ஆசா ரத்துடன் அங்கந் துலக்கி | aasaa raththudan angam thulakki |
நேச முடன்ஒரு நினைவது வாகி | nEsa mudanoru ninaivadhu vaagik |
கந்தர் சஷ்டிக் கவசம் இதனைச் (205) | kandhar sashdi kavasa midhanaich |
சிந்தை கலங்காது தியானிப்பவர்கள் | sindhai kalangaadhu thiyaanip pavargaL |
ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு | orunNaaL muppath thaaRuruk kondu |
ஓதியே செபித்து உ கந்து நீறணிய | OdhiyE sebiththu ugandhunNee RaNiya |
அஷ்டதிக் குள்ளோர் அடங்கனும் வசமாய்த் | attadhik kuLLOr adangalum vasamaayth |
திசைமன்ன ரெண்மர் செயலது அருளுவர் (210) | thisaimanna reNmar sErththaNG karuLuvar |
மாற்றல ரெல்லாம் வந்து வணங்குவர் | maaTRala rellaam vandhu vaNanguvar |
நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும் | navagOL magizhndhu nanmai yaLiththidum |
நவமத னெனவும் நல்லெழில் பெறுவர் | Navametha naenavum nalvezhil peruvar |
எந்த நாளுமீ ரெட்டா வாழ்வர் | endha naaLumee rettaa vaazhvar |
கந்தர்கை வேலாம் கவசத் தடியை (215) | kandhargai vElaam kavasath thadiyai |
வழியாற் காண மெய்யாம் விளங்கும் | vazhiyaayk kaaNa meyyaay viLangum |
விழியாற் காண வெருண்டிடும் பேய்கள் | vizhiyaaR kaaNa verundidum pEygaL |
பொல்லா தவரைப் பொடிப் பொடி யாக்கும் | pollaa thavaraip podibodi yaakkum |
நல்லோர் நினைவில் நடனம் புரியும் | Nalloar ninaivil nadanam puriyum |
சர்வ சத்துரு சங்கா ரத்தடி (220) | sarva saththuru sangaa raththadi |
அறிந்தென துள்ளம் அஷ்டலட் சுமிகளில் | aRindhena thuLLam attalat sumigaLil |
வீரலட் சுமிக்கு விருந்துண வாகச் | veeralat sumikku virundhuNa vaagach |
சூரபத்மாவைத் துணித்தகை யதனால் | soorabath thumaavaith thuNiththagai adhanaal |
இருபத் தேழ்வர்க்கு உ வந்தமு தளித்த | irubath thEzhvarkku uvandhamu thaLiththa |
குருபரன் பழநிக் குன்றினி லிருக்கும் (225) | kurubaran pazhanik kunRini lirukkum |
சின்னக் குழந்தை சேவடி போற்றி | sinnak kuzhandhai sEvadi pOTRi |
எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம் | enaiththaduth thaatkoLa enRana thuLLam |
மேவிய வடிவுறும் வேலவ போற்றி | maeviya vadivurum velavaa poatri |
தேவர்கள் சேனா பதியே போற்றி | thEvargaL sEnaa padhiyE pOTRi |
குறமகள் மனமகிழ் கோவே போற்றி (230) | kuRamagaL manamagizh kOvE pOTRi |
திறமிகு திவ்விய தேகா போற்றி | Thiramig divviya degaa poatri |
இடும்பா யுதனே இடும்பா போற்றி | Idumbaa uythanae idumbaa poatri |
கடம்பா போற்றி கந்தா போற்றி | kadambaa pOTRi kandhaa pOTRi |
வெட்சி புனையும் வேளே போற்றி | vetchi punaiyum vElE pOTRi |
உ யர்கிரி கனக சபைக்கு ஓரரசே (235) | uyargiri kanaga sabaikkO rarasE |
மயில்நட மிடுவோய் மலர் அடி சரணம் | mayilnNada miduvOy malaradi saraNam |
சரணம் சரணம் சரஹுண பவ ஓம் | saraNam saraNam saravaNa pavaOm |
சரணம் சரணம் சண்முகா சரணம் | saraNam saraNam saNmugaa saraNam |
Transcription by:
N.R. Jayaraman
Bangalore-76, India